Home நாடு நஜிப்புக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப் போதுமான ஆதாரங்கள் உள்ளன: மகாதீர்

நஜிப்புக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப் போதுமான ஆதாரங்கள் உள்ளன: மகாதீர்

964
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி ஊழலில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

“அரசாங்கப் பணத்தைத் திருடியது, அரசாங்கப் பணத்தை இழந்தது, அரசாங்கப் பணத்தை லஞ்சமாகக் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவிருக்கின்றன” என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மகாதீர் கூறுகையில், “1எம்டிபி-க்கு முற்றிலும் அவர் (நஜிப்) தான் பொறுப்பு. அவருடைய கையெழுத்து இல்லாமல் எதுவும் நடந்திருக்காது. 1எம்டிபி தொடர்பில் அவர் கையெழுத்துடன் கூடிய அனைத்து ஒப்பந்தங்களும் எங்களிடம் உள்ளன. எனவே அவர் தான் பொறுப்பு” என்றும் மகாதீர் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, 1எம்டிபி ஊழலில் நஜிப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோருக்கும் தொடர்பு இருப்பதாகவும், எனவே விசாரணை அதிகாரிகள் அவரையும் விசாரணை செய்து வருவதாகவும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.