Home உலகம் பிரேசில் 2-வது சுற்றுக்கு முன்னேறுகிறது!

பிரேசில் 2-வது சுற்றுக்கு முன்னேறுகிறது!

954
0
SHARE
Ad

மாஸ்கோ –  உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ‘இ’ பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய நேற்று புதன்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.

மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டங்கள் நடைபெற்றன.

ஓர் ஆட்டத்தில் பிரேசிலும் – செர்பியாவும் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் செர்பியாவை 2-0 கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து ‘இ’ பிரிவில் 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்த பிரேசில் இரண்டாவது சுற்றுக்குத் செல்கிறது.

பிரேசிலின் பாலின்ஹோ 36-வது நிமிடத்திலும், டி.சில்வா 68-வது நிமிடத்திலும் கோல் அடிக்க பிரேசில் வெற்றி வாகை சூடியது.

செர்பியா உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது.

அடுத்து எதிர்வரும் ஜூலை 2-ஆம் தேதி இரண்டாவது சுற்றுக்கான ஆட்டத்தில் பிரேசில் மெக்சிகோவைச் சந்திக்கும்.

இதே நேரத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தும், கோஸ்தா ரிக்காவும் விளையாடின. இதில் 2-2 என இரண்டு குழுக்களுமே சமநிலை கண்டதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து 5 புள்ளிகளுடன் ‘இ’ பிரிவிலிருந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிச் செல்கிறது.