Home உலகம் சுவீடன் 3 – மெக்சிகோ 0 – இரண்டு குழுக்களும் 2-வது சுற்றுக்கு செல்கின்றன!

சுவீடன் 3 – மெக்சிகோ 0 – இரண்டு குழுக்களும் 2-வது சுற்றுக்கு செல்கின்றன!

1341
0
SHARE
Ad

மாஸ்கோ –  உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ‘எஃப்’ பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய இன்று புதன்கிழமை மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.

ஓர் ஆட்டத்தில் ஜெர்மனியும் தென் கொரியாவும் மோதின. இந்த ஆட்டத்தில் தென் கொரியா 2-0 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

மற்றோர் ஆட்டத்தில் சுவீடனும் மெக்சிகோவும் விளையாடின. முதல் பாதி ஆட்டம் முடிய 0-0 என்ற நிலையில் இரு குழுக்களுமே கோல்கள் எதுவும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன.

#TamilSchoolmychoice

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அகஸ்டின்சன் ஒரு கோலைப் போட்டு சுவீடனை முன்னணிக்குக் கொண்டு வந்தார். 50-வது நிமிடத்தில் இந்த கோல் அடிக்கப்பட்டது.

60-வது நிமிடத்தில் சுவீடனுக்குக் கிடைத்த பினால்டி வாய்ப்பை கிரான்குவிஸ்ட் கோலாக்க, 2-0 கோல் எண்ணிக்கையில் சுவீடன் முன்னணி வகித்து வந்தது.

தொடர்ந்து மெக்சிகோவின் அல்வாரெஸ் ஆட்டத்தின்போது சொந்த கோலை அடித்ததைத் தொடர்ந்து சுவீடன் 3-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தது.

முழு ஆட்டம் முடிவடைந்த நிலையில் இரண்டு குழுக்களுமே கோல் எதுவும் அடிக்காத காரணத்தால்,சுவீடன்3-0 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

‘எஃப்’ பிரிவில் இருந்து மெக்சிகோ, சுவீடன் இரண்டு நாடுகளும் அடுத்த இரண்டாவது சுற்றுக்கு செல்கின்றன.