Home உலகம் கொரியா 2-0 வென்றது : ஜெர்மனி வெளியேறியது (முழு ஆட்டம்)

கொரியா 2-0 வென்றது : ஜெர்மனி வெளியேறியது (முழு ஆட்டம்)

1162
0
SHARE
Ad

மாஸ்கோ – (மலேசிய நேரம் இரவு 10.50 மணி)  உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ‘எஃப்’ பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய இன்று புதன்கிழமை மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஓர் ஆட்டத்தில் ஜெர்மனியும் தென் கொரியாவும் மோதின.

முதல் பாதி ஆட்டம் முடிந்த நிலையில் இரண்டு குழுக்களுமே கோல் அடிக்க முடியாமல் 0-0 என சமநிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டுள்ளன.

#TamilSchoolmychoice

இரண்டாவது பாதி ஆட்டத்தில் 90 நிமிடங்கள் முடிந்தும் இரண்டு குழுக்களும் கோல் எதுவும் அடிக்க முடியாமல் திணறின.

எனினும் கூடுதலா வழங்கப்பட்ட 6 நிமிடங்களில் தென் கொரியா சர்ச்சைக்குரிய ஒரு கோலைப் புகுத்தி 1-0 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜெர்மனிக்கு வெற்றி கோலை அடிக்க கோல் கீப்பர் உள்ளிட்ட அனைத்து விளையாட்டாளர்களும் தென் கொரியா கோல் முனையை நோக்கி முன்னேறினர். ஜெர்மனியின் கோல் கீப்பரும் தென்கொரியா கோல் முனையை நோக்கி முன்னேறினார்.

ஆனால், எதிர்பாராத விதமாக கொரிய ஆட்டக்காரர் பந்தை எடுத்து வந்து கோலி இல்லாமல் காலியாக இருந்த ஜெர்மனியில் கோல் வளையத்தில் கோல் அடித்து கோல் எண்ணிக்கையை 2-0 என்றாக்கினார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஜெர்மனி போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது.

2014-ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் உலகக் கிண்ணத்தை வென்ற குழு ஜெர்மனி என்பது குறிப்பிடத்தக்கது.