Home நாடு அரசு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி கைது

அரசு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி கைது

959
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – அரசு நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரி 300 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய குத்தகை ஒன்று மீதான ஊழல் காரணமாக இன்று புதன்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.

புத்ரா ஜெயாவில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை ஒப்பந்தப் புள்ளி குத்தகைக்கு விட்டதில் (டெண்டர்) நிகழ்ந்த ஊழல் தொடர்பில் 59 வயது, டத்தோ அந்தஸ்து கொண்ட அந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பதை ஊழல் தடுப்பு ஆணையமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று நண்பகலில் அவரது அலுவலகத்தில் அந்நபர் கைது செய்யப்பட்டார்.