Home நாடு புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் அம்னோவிலிருந்து விலகினார்

புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் அம்னோவிலிருந்து விலகினார்

1061
0
SHARE
Ad
சைட் அபு ஹூசேன் ஹாபிஸ் – புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர்

ஈப்போ – பேராக் மாநிலத்தில் உள்ள புக்கிட் கந்தாங் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் சைட் அபு ஹூசேன் ஹாபிஸ் சைட் அப்துல் ஃபாசால் அம்னோவிலிருந்து விலகியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த அம்னோ இளைஞர் மகளிர் பகுதிகளின் தேர்தல் முடிவுகள் தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் அதன் காரணமாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தொகுதியின் துணைத் தலைவரிடம் தாம் பொறுப்பை ஒப்படைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இனி தான் அம்னோ, தேசிய முன்னணியிலிருந்து விலகி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்படப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் நூர் அஸ்மி கசாலி அம்னோவிலிருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.

மே 9 பொதுத் தேர்தலில் 54 தொகுதிகளை வென்ற அம்னோவின் பலம் தற்போது இந்தப் பதவி விலகல்களைத் தொடர்ந்து 52 ஆகக் குறைந்துள்ளது.