கோலாலம்பூர் – 1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மிக விரைவில் நஜிப்பும், அவரது துணைவியார் ரோஸ்மாவும் மற்றும் அவர்களுக்கு அப்பொருட்களை பரிசாக அளித்தவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என புக்கிட் அமான் வர்த்தக குற்ற விசாரணைத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து இன்று புதன்கிழமை அமார் சிங் கூறுகையில், “அவர்களை விரைவில் விசாரணைக்கு அழைப்போம். எனினும், இதனுடன் தொடர்புடைய மற்றவர்களை முதலில் விசாரிக்க வேண்டும். இதுவரையில், விசாரணையில் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது” என்றும் அமார் சிங் தெரிவித்திருக்கிறார்.