Home நாடு சீனாவில் இருந்து இறக்குமதியான சாடினில் புழுக்கள் – அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் இருந்து இறக்குமதியான சாடினில் புழுக்கள் – அதிகாரிகள் எச்சரிக்கை!

1003
0
SHARE
Ad

புத்ராஜெயா – சீனாவில் இருந்து பினாங்கு என்பிசிடிக்கு (North Butterworth Container Terminal) கடந்த மே 14-ம் தேதி இறக்குமதியான சாடின் மீன்களில், மனிதர்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய புழுக்கள் இருப்பதை மலேசிய தொற்றுநோய் மற்றும் ஆய்வு சேவை (Maqis) அமைப்புக் கண்டறிந்திருக்கிறது.

இது குறித்து அதன் இயக்குநர் டத்தோ மொக்தாருடின் ஹுசைன் கூறுகையில், “நேரடியாக ஆய்வு செய்ததிலும், மாதிரி எடுத்து ஆய்வு செய்து பார்த்ததிலும், இரண்டு கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த சார்டின் கலன்களில் ‘ஜெனஸ் அனிசாகிஸ் எஸ்பிபி’ என்ற வகை தொற்று நோய் ஏற்படுத்தக் கூடிய புழுக்கள் இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது.

“200,000 ரிங்கிட் மதிப்புடைய பொருட்களைக் கொண்ட அந்த இரு கொள்கலன்களிலும் மொத்தம் 36,720 கிலோ சார்டின் மீன்கள் இருந்தன” என்று தெரிவித்திருகிறார்.

#TamilSchoolmychoice

ஜெனஸ் அனிசாகிஸ் எஸ்பிபி என்ற வகை புழுக்களானது மனிதர்களிடத்தில் அனிசாகியாசிஸ் என்ற வகை நோயை ஏற்படுத்துகின்றது என்றும் மொக்தாருடின் தெரிவித்திருக்கிறார்.