Home நாடு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் பக்காத்தானுக்கு ஆதரவு

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் பக்காத்தானுக்கு ஆதரவு

1210
0
SHARE
Ad
நூர் அஸ்மி கசாலி

பாகான் செராய் – பேராக் மாநிலத்தில் உள்ள பாகான் செராய் நாடாளுமன்றத்தின் அம்னோ சார்பு உறுப்பினர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி அம்னோவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரதமர் துன் மகாதீருக்கும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும் தனது ஆதரவைத் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் 172 வாக்குகள் வித்தியாசத்தில் நூர் அஸ்மி, தன்னை அடுத்து அதிக வாக்குகள் பெற்ற பாஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார்.

NEGERI PERAK
Parlimen P.058 – BAGAN SERAI
PARTI MENANG BN
MAJORITI UNDI 172
NAMA PADA KERTAS UNDI BIL. UNDI
DATO DR NOOR AZMI BIN GHAZALI (BN) 17220
ADAM BIN ASMUNI (PKR) 12987
USTAZAH ROHAYA BINTI BAKAR (PAS) 17048
#TamilSchoolmychoice

 

நூர் அஸ்மியை எதிர்த்து பிகேஆர் சார்பில் போட்டியிட்ட அடாம் பின் அஸ்முனி 12,987 வாக்குகள் பெற்று மூன்றாவது நிலையை அடைந்தார்.

நூர் அஸ்மி அம்னோவிலிருந்து விலகுவதைத் தொடர்ந்து அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர் பலம் 53 ஆகக் குறையும்.