Home நாடு “நஜிப் மகனுடன் நான் படுக்கவில்லை” – தைவான் நடிகை

“நஜிப் மகனுடன் நான் படுக்கவில்லை” – தைவான் நடிகை

1512
0
SHARE
Ad
தைவானிய நடிகை சிலியா சாங்

கோலாலம்பூர் – காதல் விவகாரமா? அல்லது வெறும் காம விளையாட்டா? இணைய ஊடகங்கள் எங்கும் தெறித்து விடப்பட்டுள்ளன நஜிப் மகன் நசிபுடின் நஜிப் மற்றும் சிலியா சாங் என்ற தைவானிய நடிகை – இருவரும் ஒன்றாகக் காணப்பட்ட படக் காட்சிகள்!

இதற்கிடையில் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 5) நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அந்த தைவானிய நடிகை இது வெறும் நட்புறவான சந்திப்பு மட்டுமே என்றும், நசிபுடினுடன் தான் படுக்கையைப் பகிரவில்லை என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சிலியா சாங்கின் நிர்வாகப் பிரதிநிதித்துவ நிறுவனத்தின் பொறுப்பாளர் முகநூலில் வெளியிட்ட பதிவின்படி நசிபுடினிடம் இருந்து சிலியா சாங் எந்தவித பரிசுப் பொருளையும், பணத்தையும் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மகன் முகமட் நசிபுடின் நஜிப் (Mohd Nazifuddin Najib) தைவான் தலைநகர் தைப்பேயின் தைவானிய நடிகை ஒருவருடன் காணப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

சிலியா சாங் (Celia Chang) என்ற அந்தப் பெயர் கொண்ட நடிகையுடன் முகமட் நசிபுடின் காணப்பட்டார் என்றும் நஜிப் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு உத்தரவாதத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் அந்தப் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

ஆப்பிள் டெய்லி என்ற அந்த இணைய ஊடகம் வெளியிட்ட செய்தியின்படி கடந்த ஜூலை 5-ஆம் தேதி முகமட் நசிபுடின் ஆடம்பரப் பகுதியான தைப்பே 101 என்ற வட்டாரத்தில் ஓர் உணவகத்தில் (ஸ்டீக் ஹவுஸ் எனப்படும் மாட்டுக்கறி பரிமாறப்படும் உணவகம்) உணவருந்தினார் என்றும், உடம்புப் பிடி நிலையம் ஒன்றில் காணப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உணவகத்தில் ஏறத்தாழ 3 மணி நேரம் முகமட் நசிபுடினும் தைவானிய நடிகையும் நேரம் செலவழித்தனர் என்பதோடு ரெட் வைன் எனப்படும் சிவப்பு திராட்சை ரச மதுபானம் அருந்தினர் என்றும் மேலும் அந்தச் செய்தி தெரிவிக்கின்றது.
அதன் பின்னர் மதுபான விடுதி ஒன்றில் சுமார் 2 மணி நேரங்களை செலவழித்த பின்னர், கிராண்ட் ஹயாட் தைப்பே தங்கும் விடுதிக்கு பின்னிரவு 1.00 மணியளவில் சென்றனர்.
சிலியா சாங் நடிகையின் பேச்சாளர் இது குறித்து கருத்துரைத்தபோது அவர் முகமட் நசிபுடினுடன் ‘துணையாளராக’ (Guide) மட்டுமே செயல்பட்டார் என்றும் அவர் வெறும் தோழி மட்டுமே என்றும் தெரிவித்திருக்கிறார்.
நசிபுடின் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 6) நாடு திரும்பினார் என்றும் அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.