Home கலை உலகம் 1 இலட்சம் ரிங்கிட் பரிசுகளுடன் அஸ்ட்ரோவின் ‘சூப்பர் ஸ்டார்’ பாடல் திறன் போட்டி

1 இலட்சம் ரிங்கிட் பரிசுகளுடன் அஸ்ட்ரோவின் ‘சூப்பர் ஸ்டார்’ பாடல் திறன் போட்டி

984
0
SHARE
Ad
அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டாரின் நிரந்தர நீதிபதி ஜேம்ஸ் வசந்தன்

கோலாலம்பூர்- மலேசிய இரசிகர்களை ஆண்டுதோறும் கவர்ந்திழுக்கும் அஸ்ட்ரோவின்  ‘சூப்பர் ஸ்டார்’ பாடல் திறன் போட்டியின் 2018-ஆம் ஆண்டுக்கான புதிய தொகுப்பு எதிர்வரும் இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 4) தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி அலைவரிசை 231-இல் ஒளியேறவுள்ளது.

ஆண்டுதோறும் பல்வகைப்பட்ட மலேசியக் கலைத் திறன்களைக் கொண்ட பலரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து அவர்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்திருக்கும் இந்நிகழ்ச்சியை அஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் அஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்திலும் கண்டு களிக்கலாம்.

அதே வேளையில், ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் பாடும் பாடல்களைப் பிரத்தியேகமாக ராக்கு அதிகாரப்பூர்வ அகப்பக்கம்  raku.my அல்லது அதன் செயலி வழியாகக் கேட்டு மகிழலாம்.

#TamilSchoolmychoice

‘சூப்பர் ஸ்டார்’ 2018 போட்டியின் முக்கிய அம்சங்கள்:

 • கடந்த ஜூன் மாதம் நாடு தழுவிய நான்கு இடங்களில் நடைபெற்ற இப்போட்டியின் குரல் தேர்வில் தேர்தெடுக்கப்பட்ட 38 போட்டியாளர்கள் ‘சூப்பர்ஸ்டார் 2018’ வெற்றி மகுடத்தை வெல்ல இந்த முறை களமிறங்குகின்றார்கள்.
 • 11 வாரங்களுக்கு மிகக் கடுமையான விதிமுறைகளுடன் நடைபெறவுள்ள இந்த இசைப் போரில் முதல் வாரம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி 8 போட்டியாளர்கள் பாடுவார்கள். அவர்களுள் அதிகமான புள்ளிகள் பெற்று ஐந்து நட்சத்திர (‘five stars’) இடத்தைப் பிடிக்கும் 5 போட்டியாளர்கள் மட்டுமே அடுத்த வாரத்திற்கான போட்டியில் களமிறங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
 • ஐந்து நட்சத்திர இடத்தைப் பிடித்த அந்த 5 போட்டியாளர்கள் இரண்டாம் வாரம் 3 புதிய போட்டியாளர்களுடன் போட்டியிடுவார்கள். சுமார் 11 வாரங்களுக்கு இதைப் போன்று தொடர்ச்சியாக இப்போட்டி நடைபெறவுள்ளது.
 • எதிர்வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் ‘சூப்பர்ஸ்டார் 2018’ இறுதிச் சுற்றில் 5 போட்டியாளர்கள் களமிறங்குவார்கள். இந்த மாபெரும் இசைப் போரில் மொத்தம் ரிம 100,000 ரொக்கப் பரிசு தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பு போட்டியாளர்களுக்கு காத்துக் கொண்டிருக்கின்றது.

  அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டாரின் அறிவிப்பாளர்கள்
 • இப்போட்டியின் நிரந்தர நீதிபதியாக பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பணியாற்றவுள்ளார். இவருடன் ஒவ்வொரு வாரமும் ஒரு உள்ளூர் இசையமையாளர்/பாடகர் மற்றும் வெளியூர் பின்னணி பாடகர்கள் நீதிபதிகளாக வலம் வருவார்கள். அவர்களுள் ரிதா, ராபிட் மேக், ராகுல் நம்பியார், ஷீலா ராமன், மாதாங்கி, சத்தியன், மற்றும் ரேணுகா ஸ்ரீ ஆகியோர் அடங்குவர்.
 • அதே வேளையில், பிரபல தமிழக நகைச்சுவை நடிகர் சதீஷ், டத்தோ ஸ்ரீ விடா, கோ கார்ட் மஞ்சித், டார்கி, தமிழ் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் பலர் இப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.
 • புகழ்பெற்ற தொலைக்காட்சி அறிவிப்பாளர் குமரேஷ், ‘விழுதுகள்’ ரேவதி மற்றும் நெவாஷன் கணேசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்கள்.
 • 12-வது வாரத்தில் சூப்பர் ஸ்டார் போட்டியின் முன்னாள் வெற்றியாளர்களின் படைப்புகள் ‘ரீயூனியன்’ எனப்படும் ஒன்று கூடும் கலைநிகழ்ச்சியில் இடம் பெறும்.
 • ‘சூப்பர் ஸ்டார்’ 2018 போட்டியின் முதன்மை ஆதரவாளர் ‘போ’ தேயிலை நிறுவனமாகும். இணை ஆதரவாளராக ‘மலிண்டோ ஏர்’ விமான சேவை நிறுவனம் செயல்பட ராகா அதிகாரப்பூர்வ வானொலி நிலையமாக இந்தப் போட்டிகளில் பங்கேற்கிறது.
 • ‘சூப்பர்ஸ்டார்’ குறித்த மேல் விவரங்கள் பெற astroulagam.com.my/MYsuperstar இணையத் தளங்களை வலம் வாருங்கள்.

2018-ஆம் ஆண்டுக்கான அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி குறித்து அஸ்ட்ரோ தமிழ்ப் பிரிவின் பொறுப்பாளரும், அஸ்ட்ரோ நிறுவனத்தின் உயர்நிலை உதவித் தலைவருமான டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, கூறுகையில், “கடந்த 16 ஆண்டுகளாக ‘சூப்பர் ஸ்டார்’ போட்டி திறமை வாய்ந்த மலேசியர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேன்மேலும் வளர்க்கச் செய்ய  ஒரு சிறந்த தளமாக இருந்து வந்துள்ளது. இப்போட்டி பல திறமையான பாடகர்களை உருவாக்கியுள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது. சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சி என்பது வேறும் பாடல் போட்டி மட்டுமல்ல. நம்  நாட்டின் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிக் கொணர ஒரு சிறந்த தளமாகும்” என்றார்.

அஸ்ட்ரோ சூப்பர் ஸ்டாருக்கான பரிசுகள்

முதல் நிலை வெற்றியாளர்                  : ரிம 50,000 ரொக்கம்

இரண்டாம் நிலை வெற்றியாளர்          : ரிம 25,000 ரொக்கம்

ஆறுதல் பரிசுகள் (3)                           : ரிம 15,000 ரொக்கம்

மிக பிரபலமான போட்டியாளர்           : ரிம 10,000 ரொக்கம்