Home இந்தியா “கருணாநிதி மிகவும் கவலைக்கிடம்” – மருத்துவ அறிக்கை வெளியீடு

“கருணாநிதி மிகவும் கவலைக்கிடம்” – மருத்துவ அறிக்கை வெளியீடு

1051
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் 7.30 மணி நிலவரம்) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலைஞர் மு.கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவனையின் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. “கருணாநிதியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. கடந்த சில மணி நேரங்களாக அவரது உடல் நிலை மோசமடைந்து வருகிறது” என அந்த மருத்துவ அறிக்கை தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து கருணாநிதி இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்தில் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையைச் சுற்றிலும் தொண்டர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

இதன் தொடர்பில் மேலும் சில முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:

  • வெளிமாவட்டத்திலிருந்து காவல் துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை திரும்பப் பணிக்கப்பட்டுள்ளார்கள்.
  • கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தைச் சுற்றி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு சாலைப் போக்குவரத்துகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
  • ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, கருணாநிதியின் உடல் நிலை குறித்து பல்வேறு ஆரூடங்கள் எழுந்துள்ளன.
  • மாவட்டங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
  • மருத்துவமனை முன்பு காவல் துறையின் அதிரடிப் பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
#TamilSchoolmychoice

-செல்லியல் தொகுப்பு