Home நாடு “அன்வாருக்கு எதிராகச் சதியா? ஆதாரம் காட்டுங்கள்” – மகாதீர்

“அன்வாருக்கு எதிராகச் சதியா? ஆதாரம் காட்டுங்கள்” – மகாதீர்

815
0
SHARE
Ad
அன்வார்-மகாதீர் இடையிலான ஆகஸ்ட் 10 சந்திப்பு

கோலாலம்பூர் – அன்வார் இப்ராகிமை அடுத்த பிரதமராக வரவிடாமல் தடுப்பதற்கு துன் மகாதீர் முன்னாள் நிதியமைச்சர் டாயிம் சைனுடினுடன் இணைந்து சதியாலோசனை செய்கிறார் என எழுந்துள்ள ஆரூடங்கள் தொடர்பில் அதனை மறுத்துள்ள மகாதீர், “அதற்கு ஆதாரம் காட்டுங்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.

“இது நல்ல குற்றச்சாட்டு” என்று கிண்டல் தொனியில் கூறியிருக்கும் மகாதீர் “சொல்பவர்கள் ஆதாரம் காட்ட வேண்டும். நான் இதுகுறித்து யாரிடமும் பேசியதில்லை. அடுத்த கட்சிகளின் விவகாரத்தில் நான் தலையிடுவதில்லை. விலகியே இருந்திருக்கிறேன்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

நேற்று திங்கட்கிழமை புத்ரா ஜெயாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மகாதீர் இவ்வாறு கூறியிருக்கிறார்.