Home வணிகம்/தொழில் நுட்பம் 3-வது கார்: 41 பில்லியன் ரிங்கிட் முதலீடு – சீன நிறுவனங்கள் முன்வருகின்றன

3-வது கார்: 41 பில்லியன் ரிங்கிட் முதலீடு – சீன நிறுவனங்கள் முன்வருகின்றன

1192
0
SHARE
Ad
சீனாவின் கீலி குழுமம் – புரோட்டோன் நிறுவனங்களுக்கு இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தை பார்வையிட்ட மகாதீர்

ஹங்சாவ் – துன் மகாதீரின் சீன வருகையை முன்னிட்டு, மலேசியாவின் 3-வது கார் திட்டத்திற்கு இரண்டு சீனா நாட்டு நிறுவனங்கள் 10 பில்லியன் அமெரிக்க டாலர் (மலேசிய ரிங்கிட் 41 பில்லியன்) மதிப்பிலான முதலீடுகளை வழங்க முன்வந்துள்ளன.

தென் பேராக்கில் அமையவிருக்கும் இந்த கார் தொழிற்சாலை வளாகத்தில் தங்களின் தயாரிப்புத் தொழிற்சாலையின் வட்டாரத் தலைமையத்தை அமைப்பதற்கும் இந்த நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

செஜியாங் கீலி ஹோல்டிங் குழுமம் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டியிருப்பதோடு மலேசியாவில் தங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.

#TamilSchoolmychoice

மூன்றாவது கார் திட்டத்திற்கான பரிந்துரையை மகாதீர் பிரதமரானது முதல் வலியுறுத்தி வருகின்றார்.

(படம்: நன்றி – தகவல் இலாகா)