சுவிட்சர்லாந்து – ஐக்கிய நாடுகள் மன்றத்தின் (ஐ.நா) முன்னாள் தலைமைச் செயலாளர் கோஃபி அன்னான் (வயது 80) இன்று சனிக்கிழமை காலமானார். ஜ.நா.வின் முதல் கறுப்பினத் தலைமைச் செயலாளரான கோஃபி அன்னார் 1997 முதல் 2006 வரை அலங்கரித்தார்.
அவரது பதவிக் காலத்தில் எந்தவித புகார்கள்களும், எதிர்மறை விமர்சனங்களும் இல்லாமல், ஐநா தலைமைச் செயலாளர் பதவிக்கு கௌரவத்தை ஏற்படுத்தித் தந்தார். அதன் பின்னர் பல்வேறு விவகாரங்களில் சிறப்புத் தூதராகப் பணியாற்றிய அன்னான், ‘எல்டர்ஸ்’ (Elders) எனப்படும் அறவாரியத்தின் தலைவராக 2007 முதல் பணியாற்றி வந்தார். இந்த அறவாரியம் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தோற்றுவித்ததாகும்.
ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்தவரான கோஃபி அன்னான் சிரியா பிரச்சனையிலும் நல்லெண்ணத் தூதுவராகப் பணியாற்றி வந்தார்.
சிறிது காலம் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் மறைந்த செய்தியை அவரது குடும்பத்தினர் அறிவித்தனர்.
கோஃபி அன்னான் அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றவராவார்.