Home நாடு அமரர் எம்.துரைராஜ் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

அமரர் எம்.துரைராஜ் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

1188
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமான நாட்டின் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எம்.துரைராஜ் அவர்களின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி தொடங்கி கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்:

No: 25 Jalan Udang Gantung Satu,

Taman Cuepacs Segambut

52000 Kuala Lumpur

இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அன்னாரின் நல்லுடல் ஷா ஆலாமில் உள்ள நிர்வாணா மெமோரியல் பார்க் என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

83 வயதான எம்.துரைராஜின் நல்லுடல் தற்போது மேற்காணும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

எழுத்தாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் துரைராஜ் அவர்களின் நல்லுடலுக்கு தொடர்ந்து அவரது இல்லம் சென்று இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.