Home நாடு புக்கிட் ராஜா டோல் நுழைவாயில் கூரைகள் காற்றினால் சரிந்து விழுந்தன

புக்கிட் ராஜா டோல் நுழைவாயில் கூரைகள் காற்றினால் சரிந்து விழுந்தன

709
0
SHARE
Ad

கிள்ளான் – வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 24) வீசிய கடுமையான காற்றின் தாக்கத்தால் கிள்ளான் புக்கிட் ராஜா சாலைவரிக் கட்டண நுழைவாயில்களின் கூரைகள் (டோல் கேட்) இரவு 10.00 மணியளவில் சேதமடைந்தன.

9 சாலைத் தடங்களைக் கொண்ட இந்த சாலைக்கட்டண முகப்பின் கூரைகள் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து அங்கு வாகனங்கள் கடந்து செல்ல முடியாத காரணத்தால் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்த புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்த இடத்தைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாரும் இதுவரையில் காயமடைந்ததாக தகவல் இல்லை.

வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணியளவில் மூன்று வாயில்கள் மட்டுமே செயல்பட்டன என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.