
புத்ரா ஜெயா – நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் இஸ்மாயில் பக்கார் புதிய அரசாங்கத் தலைமைச் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார். பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெறும் நடப்பு அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சாவுக்குப் பதிலாக இஸ்மாயில் பக்கார் நியமனம் பெற்றுள்ளார்.
2012 முதல் அலி ஹம்சா அரசாங்கத் தலைமைச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். ஆகஸ்ட் 29-ஆம் தேதியோடு அவரது பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.
14-வது அரசாங்கத் தலைமைச் செயலாளராக இஸ்மாயில் பக்கார் பதவியேற்கிறார்.
