கோலாலம்பூர்: 1எம்டிபியின் இறுதி கணக்கறிக்கையின் ஒரு பகுதியை நீக்குவதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஒரு சந்திப்புக் கூட்டத்திற்கு உத்தரவிட்டதாக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கூறப்பட்டது.
முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் அலி ஹம்சா அக்கூட்டத்தை நஜிப் அழைத்ததாக உறுதிப்படுத்தினார். 2012 முதல் ஆகஸ்ட் 2018 வரை இந்த பதவியை வகித்த அலி, அரசு தரப்பு சாட்சியாக அழைக்கப்பட்டுள்ளார்.
1எம்டிபி இறுதி கணக்கறிக்கையில் ஒரு பகுதியை நீக்கும் கூட்டத்திற்கு நஜிப் உத்தரவிட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.
1எம்டிபியின் இறுதி கணக்கறிகையை தேசிய பொது கணக்காய்வாலர் குழுவிடம் சம்ர்ப்பிக்கும் முன்பதாக அதனை மாற்ற உத்தரவிட்டதை மறுத்த நஜிப் விசாரணைக் கோரினார்.
புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் துறையில் 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் 26 வரை இது செயல்படுத்தப்பட்டதாக நஜிப் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. நஜிப் குற்றவாளி எனில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.