Home One Line P1 “அஸ்மினுடனான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு விசாரிக்கப்படும்!”- சாஹிட் ஹமீடி

“அஸ்மினுடனான அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு விசாரிக்கப்படும்!”- சாஹிட் ஹமீடி

794
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி இடையே நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சந்திப்பு, தங்கள் தொகுதிகளுக்கு அரசாங்க திட்டங்களை விநியோகிப்பது குறித்து விவாதிப்பதற்காக என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி கூறினார்.

எவ்வாறாயினும், இந்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் ஆலோசனைக்கு எதிரானது என்று உணர்ந்த கட்சியிடமிருந்து புகார்களைப் பெற்றதாக சாஹிட் ஒப்புக் கொண்டார்.

#TamilSchoolmychoice

எனக்கு தகவல் கிடைத்தது. நாடாளுமன்ற ஒதுக்கீட்டின் மூலம் அரசாங்க திட்டங்களை அவரவர் தொகுதிகளுக்கு வழங்குவதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது. இருப்பினும், இது ஒரு கருத்தை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்பு கூறியதுபோல் ஒவ்வொரு கூட்டமும் கூட்டாக இருந்து நடத்தப்பட வேண்டும். அச்சந்திப்பு இடம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். இதுவே சிறப்பானதாக இருக்கும்.” என்று இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

புத்ராஜெயாவில் பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மினின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு நடந்த கூட்டத்தை விளக்க சாஹிட் இன்று இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

கூட்டத்தில் அம்னோ உறுப்பினர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகள் குறித்து கட்சி கவனம் செலுத்தி வருவதாக பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரான சாஹிட் மேலும் தெரிவித்தார்.

தற்போதுள்ள விதிகளின் கீழ் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு, இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கட்சித் தலைமை ஒப்புக் கொண்டதாகவும் சாஹிட் தெரிவித்தார். ​​நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து அம்னோ உறுப்பினர்களும் கட்சித் தலைமையின் முடிவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் சாஹிட் வலியுறுத்தினார்.