பெனோம்பென் – அங்கோர் வாட் என்ற பழம்பெருமை வாய்ந்த இந்து ஆலயங்களைக் கொண்ட நாடு கம்போடியா. இந்த நாட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அதிகாரபூர்வ வருகை மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இங்குள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் ஒன்றைப் புதுப்பிக்க இந்தியா உதவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.
பிரியா விஹார் (Preah Vihear) என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த சிவன் ஆலயம், உலகின் பாரம்பரிய வளாகங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றதாகும்.
கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் இருநாட்டுப் பிரதிநிதிகளாலும் கம்போடியத் தலைநகர் பெனோம்பென்னில் கையெழுத்திடப்பட்டது.
படம்: நன்றி – சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் பக்கம்