Home கலை உலகம் அண்ணி மரணம் – பெங்களூரு விரைந்த ரஜினி!

அண்ணி மரணம் – பெங்களூரு விரைந்த ரஜினி!

1265
0
SHARE
Ad

பெங்களூரு – நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்திய நாராயணராவ் மனைவி கலாவதிபாய் பெங்களூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானதைத் தொடர்ந்து இன்று காலை விமானம் மூலம் ரஜினி பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.

சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்த ரஜினியை வளர்த்து உருவாக்கியதில் அவரது அண்ணனுக்கும் அண்ணிக்கும் முக்கிய பங்குண்டு என பல பேட்டிகளில் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

அடிக்கடி பெங்களூரு சென்று அண்ணன் – அண்ணியைச் சந்திப்பதையும், தனது முக்கியக் காரியங்களில் அவர்களின் ஆசியைப் பெறுவதையும் ரஜினி வழக்கமாகக் கொண்டிருந்தார்.