Home நாடு “நீதிக்கு உட்பட்டே குவான் எங்கை விடுதலை செய்தோம்” – தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கை

“நீதிக்கு உட்பட்டே குவான் எங்கை விடுதலை செய்தோம்” – தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கை

1125
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – நிதி அமைச்சர் லிம் குவான் எங் மற்றும் வணிகப் பெண்மணி பாங் லீ கூன் இருவரையும் விடுதலை செய்ய ஒப்புக் கொள்ளும் முடிவானது, அரசியல் காரணங்கள், நெருக்குதல்கள் எதுவுமின்றி, சட்டப்படியும், நீதிக்குட்பட்டுமே எடுக்கப்பட்டது என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மேலும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் அந்த முடிவில் சம்பந்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் மேல்முறையீடு மற்றும் வழக்கும் நடத்தும் பிரிவின் தலைவர் முகமட் ஹனாபியா சக்காரியா அந்த அறிக்கையை தனது அலுவலகத்தின் சார்பில் இன்று விடுத்திருந்தார்.

#TamilSchoolmychoice

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு தரப்புகளும் சமர்ப்பித்த மேல்முறையீடுகள், வாதங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் முழுக்க முழுக்க ஆதாரங்களின் அடிப்படையிலும், யாருக்கும் அஞ்சாமலும், எந்தவித நெருக்குதல்கள் இல்லாமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் முகமட் ஹனாபியா தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

ஒருவர் மீது சுமத்தப்பட்ட வழக்குகளை அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் மீட்டுக் கொள்வதும், வழக்கை தொடர்ந்து நடத்தாமல் நிறுத்திக் கொள்வதும் இது முதன் முறையல்ல என்றும், இதுபோன்று ஏற்கனவே பலமுறை நடந்திருக்கின்றன – சட்டத்திலும் அதற்கு இடமுண்டு – என்றும் முகமட் ஹனாபியா தெரிவித்தார்.