Home இந்தியா மூவர் கொலை : பாகிஸ்தானுடனான சந்திப்பை இரத்து செய்த இந்தியா

மூவர் கொலை : பாகிஸ்தானுடனான சந்திப்பை இரத்து செய்த இந்தியா

1058
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் 3 பேர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (படம்) இம்மாத இறுதியில் நியூயார்க்கில் நடத்தவிருந்த சந்திப்பை இந்தியா இரத்து செய்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இம்ரான்கான் மோடிக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் இருநாடுகளுக்கும் இடையில் சமாதானம் நிலவும் வகையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையில் நியூயார்க் நகரில் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

ஆனால் ஜம்மு காஷ்மீர் பகுதியில் காவல் துறையினர் 3 பேர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.