Home Photo News வல்லபாய் படேல்: உலகின் மிக உயரமான சிலையை மோடி திறந்து வைத்தார்

வல்லபாய் படேல்: உலகின் மிக உயரமான சிலையை மோடி திறந்து வைத்தார்

2207
0
SHARE
Ad

புதுடில்லி – இந்திய சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்களில் ஒருவரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவரும், மகாத்மா காந்தி, நேரு காலத்தின் சமகால அரசியல்வாதியுமான சர்தார் வல்லபாய் படேலின் உயரமான சிலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இன்று கொண்டாடப்படும் வல்லபாய் படேலில் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு திறக்கப்படும் இந்த சிலை உலகிலேயே மிக உயரமான சிலையாகும். “ஒற்றுமை சிலை” என இந்த சிலை வர்ணிக்கப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் நர்மதா நதிக் கரையில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை இன்று திறந்து வைத்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி, நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலின் பணிகளையும், போராட்டங்களையும் நினைவு கூர்ந்தார். வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராவார்.

#TamilSchoolmychoice

திறப்புவிழா விழாவின் போது வல்லபாய் படேலின் சிலை மீது இராணுவ விமானங்கள் பூக்களைத் தூவின.

2,989 கோடி ரூபாய் செலவில் 182 மீட்டர் உயரத்தில் உருவான இந்த சிலை, இதுவரை உலகின் உயரமான சிலையாகக் கருதப்பட்ட சீனாவின் புத்தர் சிலையை (Spring Temple Buddha) விட 177 அடிகள் கூடுதல் உயரத்தைக் கொண்டதாகும்.

பத்மபூஷன் விருது பெற்ற இந்தியாவின் முன்னணி சிற்பி ராம் வி சுதார் வடிவமைத்த இந்த சிலையை உருவாக்க 250 பொறியியல் வல்லுநர்களும் 3,400 தொழிலாளர்களும் சுமார் 33 மாதங்கள் உழைத்திருக்கின்றனர். லார்சன் டர்போ நிறுவனமும் இணைந்து இந்த சிலையின் கட்டுமானத்தில் பங்காற்றியிருக்கிறது.

193 மீட்டர் உயரத்தில் இந்த சிலையில் பார்வையாளர்கள் பார்க்கும் தளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 200 பேர் இந்தத் தளத்தைப் பயன்படுத்தலாம். இங்கிருந்து பார்த்தால் சர்தான் சரோவர் அணைக்கட்டைப் பார்வையிட முடியும் என்பதோடு சத்புரா மற்றும் விந்திய மலைத் தொடர்களின் அழகையும் கண்டு இரசிக்கலாம்.

பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட திறப்பு விழா காட்சிகளையும், சர்தார் வல்லபாய் படேலின் சிலையின் பிரம்மாண்டமானத் தோற்றங்களையும் இங்கே காணலாம்: