Home இந்தியா விண்வெளி வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ் இன்று இந்தியா வருகை

விண்வெளி வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ் இன்று இந்தியா வருகை

740
0
SHARE
Ad

sunithaபுதுடெல்லி, ஏப்ரல் 1- இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சுனிதா வில்லியம்ஸ் (47).

விண்வெளி கலத்தில் அதிக தூரம் பயணித்த முதல் பெண், விண்வெளியில் அதிக நேரம் தங்கியிருந்த இரண்டாவது பெண் என்பன உள்ளிட்ட பல சாதனைகளை இவர் படைத்துள்ளார்.

அமெரிக்க கடற்படை அதிகாரியாகவும் உள்ள இவர், தனது 2 பயணங்களின் போது 322 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த 50 மணிநேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்த முதல் வீராங்கணை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

இவரது தந்தை தீபக் பாண்ட்யா, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். வில்லியம்ஸ் என்ற அமெரிக்கரை திருமணம் செய்துக் கொண்டு, அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இவர், கடந்த 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா வந்திருந்த போது, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். உலக குஜராத்திகள் அமைப்பின் சார்பில் சுனிதா வில்லியம்சுக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் விஷ்வ பிரதிபா விருது வழங்கப்பட்டது.

6 ஆண்டுகளுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் இன்று மீண்டும் இந்தியா வருகிறார். புதுடெல்லியில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் இவர் 2-ம் தேதி வரை டெல்லியில் தங்கி மேலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

ஏப்ரல் 3 மற்றும் 4 தேதிகளில் மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு குஜராத் மாநிலத்தில் உள்ள தனது தந்தை வசித்த ஜுலாசன் கிராமத்திற்கு செல்கிறார்.