Home உலகம் செவ்வாய்க் கிரகத்திற்குப் பயணம் போகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

செவ்வாய்க் கிரகத்திற்குப் பயணம் போகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

694
0
SHARE
Ad

sunitha-williamsநியூயார்க்,ஜூலை 12- செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும்  நாசாவின் திட்டத்திற்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தேர்வாகியுள்ளார்.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இதற்காகப் போயிஸ் கம்பெனி மற்றும் ‘ஸ்பேஸ்–எக்ஸ்’ என்னும் நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான விண்கலத்தைத் தயாரித்து வருகிறது.

#TamilSchoolmychoice

அந்த வகையில் முதல் கட்டமாக 2017- ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட் உருவாக்கப்படுகிறது.

இந்தச் சாதனைப் பயணத்திற்காகச் சுனிதா வில்லியம்ஸ், ராபர்ட், டக்லஸ் ஹர்லி ஆகியோரை நாசா தேர்வு செய்துள்ளது.

இம்மூவருக்கும் விரைவில் செவ்வாய்க் கிரகத்திற்குச் செல்வதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.