Home இந்தியா கேரளாவில் பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை அறிமுகம்

கேரளாவில் பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை அறிமுகம்

530
0
SHARE
Ad

08tvSHE_TAXI_1_1712806fதிருவனந்தபுரம், ஜூலை 12- டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை,பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் பெண்கள் டாக்ஸியிலோ ஆட்டோவிலோ பயணம் செய்வது பாதுகாப்பற்றதாகக் கருதப்படுவதாலும், அதற்கேற்றபடி டாக்ஸி, ஆட்டோவில் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் கற்பழித்துக் கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்வதாலும், கேரளாவில் பெண்களுக்கென்று தனியாகப் பெண்களே ஓட்டும் She taxi அறிமுகப்படுத்தப்பட்டது.

கேரளாவில் She taxiக்கு இளம் பெண்கள் முதல் கிழவிகள் வரை மிகுந்த வரவேற்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவையும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இது குறித்து அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர் எம்.கே. முனீர் கூறுகையில், “பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் She taxi திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதன் வெற்றியைத் தொடர்ந்து “She Bus” திட்டத்தை மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

#TamilSchoolmychoice

கொச்சி, கோலிக்கோடு ஆகிய நகரங்களில் இப்புதிய பேருந்து சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

குளிர்சாதன வசதி கொண்ட இப்பேருந்தில் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் பயணிக்கலாம். டிக்கெட்டின் விலை அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் நிர்ணயிக்கப்படும்” என்றார்.