அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் புவனாஸ் ஏர்ஸ் வந்தடைந்தார்.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அர்ஜெண்டினா வந்தடைந்து, இங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, உலகத் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.
“அமைதிக்காக யோகா” (Yoga For Peace) என்னும் யோகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோடி, அர்ஜெண்டினாவில் வாழும் இந்தியர்களுடனான சந்திப்புக் கூட்டம் ஒன்றையும் நடத்தினார். அடுத்த ஆண்டு காசி நகரில் நடைபெறவிருக்கும் பிரவாசி பாரதிய டிவாஸ் எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டிலும், கும்பமேளாவிலும் கலந்து கொள்ள வருமாறு அவர் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

