Home 13வது பொதுத் தேர்தல் சிவராசா சுபாங் தொகுதியில் மீண்டும் போட்டியிடவில்லை?

சிவராசா சுபாங் தொகுதியில் மீண்டும் போட்டியிடவில்லை?

744
0
SHARE
Ad

Sivarasa-FEATUREஜனவரி 20 – ஆரம்ப காலம் தொட்டு பிகேஆர் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு போராட்டக் களங்களில் எதிர்க் கட்சிகளின் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் முன்னணியில் நின்ற வழக்கறிஞர் சிவராசா எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுபாங் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டார் என்று தெரிகின்றது.

தனது சொந்த விவகாரங்கள், உடல் நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த முறை போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள சிவராசா முடிவெடுத்திருப்பதாகவும் கட்சித் தலைமையும் அதற்கு இணக்கம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனைத் தொடர்ந்து சுபாங் தொகுதியில் புதிய வேட்பாளர் யார் என்பதில் பிகேஆர் கட்சியில் கடுமையான போட்டி நிலவுவதாக தெரிகின்றது. படித்தவர்களையும், சீன வாக்காளர்களையும் அதிகமாக கொண்ட தொகுதி என்பதால் பிகேஆர் வேட்பாளர் இங்கே சுலபமாக வெல்ல முடியும். இதனால் பலரும் இங்கே போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலில் ம.இ.காவின் தற்போதைய தலைமைச் செயலாளரும், வழக்கறிஞருமான முருகேசன் போட்டியிட்டு தோல்வி கண்ட தொகுதி இது. இந்த முறை ம.இ.கா இங்கே போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ம.இ.காவுக்கு பதிலாக அம்னோ அல்லது மசீச கட்சிகள் இங்கே தேசிய முன்னணி சார்பாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.