மே 9 பொதுத் தேர்தல் முடிந்ததும் மகாதீர் தலைமையில் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் மே 10-ஆம் தேதி நடத்திய முதல் பத்திரிக்கைச் சந்திப்பைக் காட்டும் புகைப்படம் 5 இலட்சம் ரிங்கிட்டுக்கு ஏலம் போனது.
1 இலட்சம் ரிங்கிட் தொடக்க விலையில் தொடங்கிய இந்தப் புகைப்படத்தின் ஏலம் 5 இலட்சம் ரிங்கிட்டைத் தொட்டது. கான் யு சாய் இந்தப் புகைப்படத்தை வாங்கினார். நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்களும் அந்தப் புகைப்படத்தில் கையெழுத்திட்டுத் தந்தனர்.
வான் அசிசாவின் புகைப்படம் ஒன்று 150,000 ரிங்கிட்டுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது.
மேலும் டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் புகைப்படம் 110,000 ரிங்கிட்டுக்கும், நிதியமைச்சர் லிம் குவான் எங்கின் புகைப்படம் 1 இலட்சம் ரிங்கிட்டுக்கும், தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் புகைப்படம் 10 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் ஏலம் போனது.
எல்லாப் புகைப்படங்களிலும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் கையெழுத்திட்டுத் தந்தனர்.