Home உலகம் ஜப்பான் தமிழ் வானொலியின் 24 மணி நேர சேவை

ஜப்பான் தமிழ் வானொலியின் 24 மணி நேர சேவை

2031
0
SHARE
Ad

தோக்கியோ – “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என தூரநோக்கோடு அன்றே பாடி வைத்த மகாகவி பாரதியாரின் கனவுகளை மெய்ப்பிப்பதுபோல், இன்று உலகின் பல நாடுகளில் தமிழின் ஓசை வானொலிகளில் வழியே காற்றில் கலந்து மிதந்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது ஜப்பான் தமிழ் வானொலியும் இணைந்துள்ளது. இணையம் வழி 24 மணிநேரமும் தமிழ் இசையை வழங்கி வருகிறது.

“தமிழ் மொழியின் பெருமையையும், தமிழரின் பண்பையும், இந்த கலாச்சாரமிக்க ஜப்பான் நாட்டிலிருந்து, இசையின் வாயிலாக, உலகிற்கு எடுத்துரைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜப்பானின் முதல் தமிழ் வானொலி இது” – என்ற முன்னுரையோடு ஜப்பான் தமிழ் வானொலியின் அகப்பக்கம் தெரிவிக்கிறது.

#TamilSchoolmychoice

வழங்கப்பட்டிருக்கும் இணைப்பிற்குள் சென்றால் தொடர்ந்து இனிய தமிழ்ப் பாடல்களை இடைவிடாமல், துல்லிய ஒலியில் கேட்டு மகிழலாம்.

ஜப்பான் தமிழ் வானொலியின் இணைப்பு:

https://www.japantamilradio.com/