“வேதமூர்த்தி குறித்துப் பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறலாம். ஆனாலும், அவர் அமைச்சராகத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து நான் மட்டுமே முடிவு செய்வேன்” என்று மகாதீர் கூறியிருக்கிறார்.
பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியினர், வேதமூர்த்தியை பதவியிலிருந்து நீக்கும்படி மகாதீருக்கு வழங்கிய கோரிக்கை மனு குறித்து பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியபோது, மகாதீர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அந்தக் கோரிக்கை மனு வழங்கப்பட்டபோது இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மானும் உடனிருந்தார்.
Comments