Home கலை உலகம் தயாரிப்பாளர் சங்க அலுவலகப் பூட்டு திறக்கப்பட்டது

தயாரிப்பாளர் சங்க அலுவலகப் பூட்டு திறக்கப்பட்டது

834
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 4.00 நிலவரம்) தமிழ்த் திரைப்படச் சங்கத் தயாரிப்பாளர் சங்கத்தில் நடப்பு சங்கத் தலைவர் விஷாலுக்கும் அவரது எதிர்த் தரப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களைத் தொடர்ந்து நேற்று ஒரு தரப்பினரால் பூட்டப்பட்ட, தியாகராய நகரிலுள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டு பதிவாளர் முன்னிலையில் இன்று பிற்பகலில் திறக்கப்பட்டது.

ஜே.கே.ரித்திஷ் தலைமையிலான ஒரு குழுவினர் அந்த அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டு பூட்டியதைத் தொடர்ந்து அதைத் திறக்க இன்று காலை விஷால் குழுவினர் முயற்சி காவல் துறையினர் அவர்களைத் தடுத்தனர். தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தினால் விஷால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

விஷால் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே அலுவலகத்தின் பூட்டு பதிவாளர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

விஷாலுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் நீண்ட நேரம் நடைபெற்ற வாக்குவாதங்களைத் தொடர்ந்து இறுதியில் அரசாங்கக் காவல் துறையினரின் கடமைக்கு இடையூறு செய்ததாக விஷாலும் அவரது குழுவினரும் கைது செய்யப்பட்டு, ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டனர்.

-செல்லியல் தொகுப்பு