Home உலகம் ஜெர்மனி பிறப்புப் பத்திரங்களில் இனி மூன்றாவது பாலினம்

ஜெர்மனி பிறப்புப் பத்திரங்களில் இனி மூன்றாவது பாலினம்

899
0
SHARE
Ad
பெர்லின் – 2019-ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியில் அரசாங்கம் வெளியிடும் பிறப்புப் பத்திரங்களில் சம்பந்தப்பட்ட நபர் மூன்றாவது பாலினத்தைச் சேர்ந்தவரா எனக் குறிப்பிடப்படும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய வரலாற்றுபூர்வ முடிவை எடுக்கும் முதலாவது ஐரோப்பிய நாடாக ஜெர்மனி திகழ்கிறது.
உடல் ரீதியாக, ஒருவர் ஆணா அல்லது பெண்ணா என்பதைத் தீர்மானிக்க முடியாத பட்சத்தில் அந்நபர் தன்னை மூன்றாவது பாலினமாக பெயர் குறிப்பிட்டுக் கொள்ளலாம் என்பதை ஜெர்மனி சட்டபூர்வமாக்கியுள்ளது.