Home கலை உலகம் ரஜினி பட விளம்பரம் : அன்று விமானத்தில், இன்று கனரக வாகனங்களில்!

ரஜினி பட விளம்பரம் : அன்று விமானத்தில், இன்று கனரக வாகனங்களில்!

1004
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடிகர் ரஜினிகாந்தின் படங்களைப் போல, அவரது படங்களுக்கான விளம்பரங்களும் பிரம்மாண்டமான அளவில் விளம்பரம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ரஜினியின் கபாலி பட வெளியீட்டின்போது ஏர் ஆசியா விமானம் முழுவதும் கபாலி பட விளம்பரம் வரையப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.

இந்த முறை பேட்ட படம் மலேசியாவில் சில கனரக வாகனங்கள் முழுக்க விளம்பரங்களாக வரையப்பட்டு மலேசியாவை வலம் வரத் தொடங்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஜனவரி 10-ஆம் தேதி பேட்ட படம் உலகம் எங்கும் வெளியீடு காண்கிறது. மலேசியாவில் இந்தப் படம் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கொர்ப்பரேஷன் நிறுவனத்தால் வெளியீடு செய்யப்படுகிறது.