Home வணிகம்/தொழில் நுட்பம் தலைநகர் பொழுதுபோக்கு மையங்கள் நஷ்டத்தை எதிர்நோக்கலாம்

தலைநகர் பொழுதுபோக்கு மையங்கள் நஷ்டத்தை எதிர்நோக்கலாம்

1176
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தலைநகரிலுள்ள பொழுதுபோக்கு மையங்கள், மதுபான விடுதிகள், எதிர்வரும் ஜனவரி முதற்கொண்டு அதிகாலை 1.00 மணிக்குள்ளாக மூடப்பட வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டால், அதன் காரணமாக இந்த மையங்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் நேரும் – குறிப்பாக அவர்களின் வணிகங்கள் பாதிக்கப்பட்டு வருமானம் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

எனவே, சுமார் 100 பொழுதுபோக்கு மைய நிறுவனங்களின் கூட்டமைப்பு (Night Entertainment Business Operators group) மாநகரசபையின் இந்தப் பரிந்துரை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு பொழுதுபோக்கு மையத்திற்கும் வழங்கப்பட்ட அனுமதிக்கேற்ப (லைசென்ஸ்) அந்தந்த நேரங்களில் மூடப்படும் தற்போதைய நடைமுறை தொடரப்பட வேண்டும் என்றும் இந்த கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

“பல வாடிக்கையாளர்கள் ஏறத்தாழ இரவு 11.00 அல்லது 12 மணிக்குத்தான் இதுபோன்ற பொழுதுபோக்கு மையத்துக்கு வருகிறார்கள். இந்த சூழலில் அதிகாலை 1.00 மணிக்கு மையங்களை மூடவேண்டும் என்றால் பல விடுதிகள் நஷ்டத்தை எதிர்நோக்கி, அதன்காரணமாக மூடுவிழா நடத்தப்பட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படலாம்” என மைனாரிட்டி பிசினஸ் சேம்பர்ஸ் (Minority Business Chambers Malaysia) மலேசியா என்ற அமைப்பின் தலைவர் ரோய் செல்வராஜ் கூறியதாக ஸ்டார் இணைய ஊடகத்தின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.