Home நாடு பள்ளிகளில் ஆங்கிலப் புலமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!- மகாதீர்

பள்ளிகளில் ஆங்கிலப் புலமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!- மகாதீர்

726
0
SHARE
Ad

திரெங்கானு: ஆங்கில மொழியை மாணவர்கள் நன்கு கற்றறிந்தவர்களாக இருப்பதற்கு ஆசிரியர்கள் முதன்மையான பங்கினை வகிப்பது அவசியமாகிறது என பிரதமர் மகாதீர் முகமட் நினைவுப்படுத்தினார். ஆங்கிலப் புலமையைக் கொண்டிருக்கும் தலைமுறையினரை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் விருப்பத்தை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.

எந்தவொரு கட்சியின் அரசியல் நலனுக்காகவும், இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சனையாக பார்க்க வேண்டாமென்றும், மாறாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான  மொழியாக ஆங்கிலம் திகழ்வதால், அம்மொழிக்கு, கல்வியாளர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என நம்புவதாக பிரதமர் கூறினார்.

இதற்கிடையே, தேசியப் பள்ளிகளில் மத போதனைப் பாடங்களுக்குப் பதிலாக இதர பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கும்படியாக பிரதமர் கூறியிருந்ததற்கு, பல்வேறு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, ஆங்கிலம், அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் போதிக்க வேண்டுமென்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.