Home நாடு நாட்டின் முக்கியக் கொண்டாட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தபால் தலை!

நாட்டின் முக்கியக் கொண்டாட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தபால் தலை!

1390
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய அஞ்சல் துறை (போஸ் மலேசியா) மூன்றாவது முறையாக நாட்டில் கொண்டாடப்படும் முக்கியப் பெருநாள்களை மையமாகக் கொண்டு தபால் தலைகளை வெளியிடவுள்ளது.

இது குறித்துப் பேசிய, தபால் தலை மற்றும் அஞ்சல் சேவைத் தலைவர் டையானா லியன் அப்துல்லா, வருகிற ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதிலும் இத்தபால் தலைகள் விற்கப்படும் என்றார்.  

#TamilSchoolmychoice

ஐந்து விதமான வடிவங்களில், ஐந்து முக்கியப் பண்டிகைகளான சீனப் புத்தாண்டு, நோன்பு பெருநாள், தடாவ் காமாதான், காவாய் மற்றும் தீபாவளியை மையமாகக் கொண்டு தபால் தலைகள் வெளியாக உள்ளதாக டையானா கூறினார். ஒரு தபால் தலை 60 சென் என்ற விலையில் விற்கப்படும்.