கேமரன் மலை: வருகிற கேமரன் மலை இடைத் தேர்தலில், பூர்வக்குடி கிராமத் தலைவர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால், அவர்களின் வருமானம் நிறுத்தப்படும் என்றும், மேலும் அவர்களின் பதவிகள் பறிக்கப்படும் என்றும் செனட்டர் போப் மனோலான் முகமட் இன்று (வெள்ளிக்கிழமை) கிராமத் தலைவர்களை சந்தித்துக் கூறினார்.
பூர்வக்குடி இனத்தைத் சேர்ந்த போப் இவ்வாறு பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பேசுகையில், பூர்வக்குடி மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயல்முறைகளை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அச்சந்திப்பில் சுமார் 18 பூர்வக்குடி கிராமத் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.
இதற்கிடையே, கிராமங்களின் அளவைப் பொறுத்து, பூர்வக்குடி கிராமத் தலைவர்களுக்கு 800 ரிங்கிட்டிலிருந்து 1,200 ரிங்கிட் வரையிலும் நிதி கொடுக்கப்பட்டு வந்தது.