Home கலை உலகம் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

1616
0
SHARE
Ad

புது டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அலியா பாட் மற்றும் வருண் தவான் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

பிரதமர் மோடி, பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்களை சந்தித்து, திரைப்படத் தொழில் விவகாரங்களை விவாதித்த சில வாரங்களுக்கு பின்னர் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தையச் சந்திப்பின் பலனாக, திரைப்பட டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு வழிவகுத்தது.

#TamilSchoolmychoice

இருப்பினும், நேற்றைய சந்திப்பு எது குறித்து நடைபெற்றது என்பது தெளிவாக வெளியிடப்படவில்லை. இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை, திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹார் அழைத்து வர இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது.

பாலிவுட்டின் முக்கிய இயக்குனர்களான ரோஹித் ஷெட்டி, ராஜ்குமார் ராவ், விக்கி கௌஷல், ஆயுஷ்மன் குர்ரானா, பூமி பெட்னெகர் மற்றும் சிதார் மல்ஹோத்ரா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.