இந்தியத் தூதர் ஶ்ரீ மிருதுள் குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை தூதர் நிக்கிலேஷ் கிரி, சமூக விவகார ஆலோசகர் ஶ்ரீ நிஷிட் குமார் உட்பட மலேசியாவிலுள்ள புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளிகள், இந்தியத் தூதரக அதிகாரிகள், இந்திய கலாச்சார மையத்தின் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ‘15வது பிரவாசி பாரதிய திவாஸ்’ விழாவினை முன்னிட்டு ‘பாரத் கோ ஜானியே’ புதிர்ப் போட்டியின் முதல் கட்ட வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்திய தூதர் தமதுரையில், ‘15வது பிரவாசி பாரதிய திவாஸ்’ குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சமூக விவகார ஆலோசகர் ஶ்ரீ நிஷிட் குமார் வருகை புரிந்த அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஜனவரி 21ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை வாரணாசியில் விமரிசையாக நடைபெறவுள்ள ‘15வது பிரவாசி பாரதிய திவாஸ்’ நிகழ்ச்சியில் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றுவார். இவ்வாண்டு பிரவாசி பாரதிய சம்மன் விருது அதிபர் ஶ்ரீ ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கு வழங்கப்படும்.