Home நாடு ‘பூர்வகுடி மக்களின் நலம்; சுய நிர்ணய உரிமை’ நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு ...

‘பூர்வகுடி மக்களின் நலம்; சுய நிர்ணய உரிமை’ நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு – வேதமூர்த்தி

1059
0
SHARE
Ad

புத்ராஜெயா – நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களின் நலனை நிலைநாட்டுவதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் குடிமக்கள் என்னும் வகையில் பூர்வ குடியினருக்கு அனைத்து உரிமையும் பாதுகாப்பும் சட்டப்படி உள்ள நிலையில் கிளந்தான்வாழ் பூர்வகுடி சமூகத்தினரின் சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்டுவதற்காக தேசிய சட்டத் துறை தலைவர்(அட்டர்னி ஜெனரல்) அலுவலகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, பூர்வகுடி மக்களின் நலனில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அக்கறைக் கொண்டிருப்பதற்கு தக்க சான்றாகும்.

கூட்டரசு மற்றும் மாநில அரசாங்க அளவில் ஏராளமான சட்டங்கள், தீபகற்ப மலேசிய பூர்வகுடி மக்கள் நிர்வாக கொள்கை அறிக்கை(1961), பழங்குடி மக்களின் உரிமைக்கான ஐநா மன்றத் தீர்மானம், பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் பூர்வகுடி மற்றும் பழங்குடி மக்கள் நலச் சட்டம்-169(1989), பூர்வகுடி மக்களுக்கான சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் எத்தனையோ பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் பூர்வகுடியினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பூர்வகுடி மக்களின் பூர்வீக நிலம், எல்லை உள்ளிட்ட அனைத்திற்கும் முன்னுரிமை இருப்பதைப் போல அவற்றை நிறைவேற்றுதற்கான கடப்பாடும் மாநில அரசுகளுக்கு உள்ளது. இருந்தும் இதுவரை பூர்வகுடி மக்களின் நலம் அந்த அளவுக்கு நிலைநாட்டப்படவில்லை.

இத்தனை சட்டம், கொள்கை யெல்லாம் வகுக்கப்பட்டிருந்தும் பூர்வகுடி மக்களின் நிலம் அவர்களின் ஒப்புதல் இன்றியே தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தங்களின் அடையாளத்தையும் கண்ணியத்தையும் இழக்க நேர்ந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் குவா மூசாங் பூர்வகுடி மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டும் வகையில் சட்டத்துறை அலுவலகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை, அந்தச் சமுதாயத்தின்மீது நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான செனட்டர் பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.