Home நாடு பொகா: 18 வயதிற்கும் கீழ்பட்ட இளையோர்களை விடுவிக்க வேண்டும்!

பொகா: 18 வயதிற்கும் கீழ்பட்ட இளையோர்களை விடுவிக்க வேண்டும்!

713
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1959-ஆம் ஆண்டு குற்றவியல் தடுப்புச் சட்டம் (பொகா), சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பதினெட்டு வயதிற்கும் கீழ்பட்ட இளையோர்களை விடுவிக்கக் கோரி மனித உரிமை சங்கம் (சுவாராம்) கேட்டுக் கொண்டது.

இது குறித்துப் பேசிய சுவாரம் தலைமை நிருவாகி, டி. சேவன், பதினெட்டு வயதிற்கும் கீழ்பட்ட சுமார் 142 இளையோர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

முன்னாள் அரசாங்கம் இந்தச் சட்டத்தை அறிமுகம் செய்த போது, கடும் குற்றங்களைப் புரிபவர்களுக்கு எதிராக மட்டும்தான் இச்சட்டம் பாயும் என உறுதி கூறி இருந்தனர்.

#TamilSchoolmychoice

கொலை போன்ற குற்றங்களைச் செய்திருந்தால், அந்த இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அதனை விடுத்து அவர்களை பொகா சட்டத்தின் கீழ் கைது செய்வது கூடாது என அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம், இதனைக் கருத்தில் கொண்டு, கைது செய்யப்பட்ட 142 இளையோர்களையும் விடுவிக்குமாறு சேவன் கேட்டுக் கொண்டார்.

தற்போது, திருட்டு போன்ற குற்றங்களுக்காகவும், பொகா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளையோர்கள் உள்ளனர் என அவர் கூறினார்.