Home நாடு செமினி: பெர்சாத்து கட்சியே வெல்லும்!- மகாதீர்

செமினி: பெர்சாத்து கட்சியே வெல்லும்!- மகாதீர்

1486
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற மார்ச் 2-ஆம் தேதி நடைபெற இருக்கும், செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில், பெர்சாத்து கட்சி மீண்டும் வெற்றிப் பெறும், என்ற நம்பிக்கையை பிரதமரும், பெர்சாத்து கட்சியின் தலைவருமான மகாதீர் முகமட் தெரிவித்தார்.

அத்தொகுதி வாழ் மலாய் சமூகத்தினரின் ஆதரவு இன்னும் பெர்சாத்து கட்சிக்கு இருப்பதை பிரதமர் உறுதிப்படுத்தினார். மலாய் சமூகத்தினரைப் பிரதிநிதித்து இரண்டு கட்சிகள் போட்டியிட்டாலும், அடிப்படை ஆய்வுகளின்படி பெர்சாத்து கட்சிக்கு மக்களின் ஆதரவு மேலோங்கி இருப்பதை அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

முன்னாள் செமினி சட்டமன்ற உறுப்பினர், பக்தியார் முகமட் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இந்தத் தொகுதியில் வருகிற மார்ச் 2-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.