அமெரிக்கா: டிரன்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு வெளியிட்ட ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 47 புள்ளிகள் கிடைத்து 61-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் 180 நாடுகளில் ஏற்படும் ஊழல் அளவீட்டை அடிப்படையாகக் கொண்டு, பட்டியல் ஒன்றை ஆண்டு தோறும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில், கடந்த ஆண்டிற்கான பட்டியலை நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நிறுவனம் வெளியிட்டது. இந்தப் பட்டியலின்படி சிவப்பு நிறக் கட்டத்தில் இடம் பெற்ற நாடுகள் அதிக ஊழல் நடக்கும் நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவ்வரிசையில், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் பெரும்பாலும் சிவப்பு நிறக் கட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இந்திய நாடு, 3 இடங்கள் முன்னேறி 78-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.
ஊழல் மிகக் குறைந்த அளவில் பதிவிடப்பட்ட நாடுகளில் டென்மார்க், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதலிரண்டு இடத்தில் இடம் பெற்றுள்ளன.