Home நாடு நாட்டின் 16-வது மாமன்னர், வரலாற்று மிக்க பதவி ஏற்பு!

நாட்டின் 16-வது மாமன்னர், வரலாற்று மிக்க பதவி ஏற்பு!

1301
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாளை (வியாழக்கிழமை), இஸ்தானா நெகாராவில் நடைபெற இருக்கும் பதவிப் பிரமாணம் நிகழ்ச்சியில், நாட்டின் 16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவியேற்க இருக்கிறார்.

பகாங் சுல்தானாக பதவியேற்று ஒரு வாரக் காலம் ஆகாத நிலையில், நாட்டின் 16-வது மாமன்னராக சுல்தான் அப்துல்லா, பதவியேற்க இருக்கும் நிகழ்ச்சியானது வரலாற்றில் இடம்பெற உள்ளது.

கடந்த ஜனவரி 24-ஆம் தேதி, மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்புக் கூட்டத்தில், சுல்தான் அப்துல்லாவை புதிய மாமன்னராக தேர்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து நாளை ஜனவரி 31-ஆம் தேதி, நாட்டின் புதிய மாமன்னராக சுல்தான் அப்துல்லா பதவி ஏற்க உள்ளார்.