Home Video இயக்குனர் ராமின் அன்பின் உச்சம், ‘பேரன்பு’!

இயக்குனர் ராமின் அன்பின் உச்சம், ‘பேரன்பு’!

1605
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் ராம் இயக்கத்தில் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ‘பேரன்பு’. இத்திரைப்படத்தில், பத்து வருடத்திற்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிகர் மம்மூட்டி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு அடுத்து, அஞ்சலி, சாதனா, சமூத்திரக்கணி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு உலகளவில் நேர்மறையான விமர்சங்களும் எழுந்துள்ளன.

இதற்கிடையே, இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இரசிகர்கள் காண விரும்பும் அனைத்தையும், இந்த படத்தில் காணலாம் என மலையாள நடிகர் நிவின் பாலி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மனித உணர்வுகளை மிக அழகாக காட்சிப் படுத்தியிருக்கின்றனர் என்றும்,  மம்மூட்டியின் உச்சக்கட்ட நடிப்பைக் காண பேரன்பு படத்தை தவறாமல் பாருங்கள் எனவும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்திற்காக மம்மூட்டி சம்பளம் பெறாமல் நடித்திருப்பதாக தயாரிப்பாளர் தேனப்பன் குறிப்பிட்டிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியினை கீழே உள்ள இணைப்பில் காணலாம்: