Home கலை உலகம் இயக்குநர் ராம் நாயகன்; மிஷ்கின் வில்லன்:புதுமையான படம் சவரக்கத்தி!

இயக்குநர் ராம் நாயகன்; மிஷ்கின் வில்லன்:புதுமையான படம் சவரக்கத்தி!

904
0
SHARE
Ad

savarakatthiசென்னை, ஜூலை 16- இயக்குநர் ராம் கதாநாயகனாகவும், மிஷ்கின் வில்லனாகவும் நடிக்க, ‘ சவரக்கத்தி’ என்னும் வித்தியாசமான தலைப்பில் உருவாகி வருகிறது ஒரு படம்.

மிஷ்கினின் உதவி இயக்குநரான ஆதித்யா இயக்கும் இப்படத்தில் மிஷ்கின் வில்லனாக நடிப்பதோடு, கதை- திரைக்கதையையும் அவர் தான் எழுதுகிறார். அதுமட்டுமல்ல; இந்தப் படத்தை ‘லோன் உல்ஃப் புரொடக்‌ஷன்’ என்னும் பெயரில் தயாரிப்பவரும் அவரே!

இப்படத்தைப் பற்றி மிஷ்கின் கூறியதாவது “நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் குழந்தையை மீண்டும் பெற்றெடுப்போம். அதற்கான கதைக்களமே சவரக்கத்தி” என்றார்.

#TamilSchoolmychoice

பி.சி. ஸ்ரீராமின் உதவியாளரான கார்த்திக் ஒளிப்பதிவில், பிசாசு இசையமைப்பாளர் அரோ குரோலியின் இசையில் படம் உருவாகிவருகிறது.

ராமும் மிஷ்கினும் தனித்துவமும் வித்தியாசமும் நிறைந்த படைப்பாளிகள். எனவே, இருவரும் இணையும் இப்படம் மிகவும் வித்தியாசமாகவே இருக்கும் என்பதால், இந்தப்படம் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.