Home இந்தியா கனமழை காரணமாக மோடியின் வாரணாசிப் பயணம் இரண்டாம் முறையாக ரத்து!

கனமழை காரணமாக மோடியின் வாரணாசிப் பயணம் இரண்டாம் முறையாக ரத்து!

554
0
SHARE
Ad

Narendra_Modiபுதுடெல்லி,ஜூலை 16- பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு கடந்த மாதம் 28–ந் தேதி செல்வதாக இருந்த பயணம், அன்று பெய்த பலத்த மழையால் ரத்து செய்யப்பட்டது.

அதற்குப் பதிலாக அவர் ஜூலை 16–ந் தேதி ( அதாவது இன்று) வாரணாசி வருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பயணத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், வாரணாசியில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மழை காரணமாகப் பிரதமர் மோடியின் பயணம் இன்றும் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிரதமர் மோடியின் வாரணாசிப் பயணம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.